< Back
மாநில செய்திகள்
அமித்ஷா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
மாநில செய்திகள்

"அமித்ஷா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை

தினத்தந்தி
|
18 Dec 2024 5:08 PM IST

அம்பேத்கர் குறித்து வக்கிர கருத்துக்களை கூறிய அமித்ஷா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் .

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்திய திருநாட்டில் யாராக இருந்தாலும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் அரசியல் நகர்வுகள் நடப்பதில்லை என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும், பாபாசாகேப் அவர்களைப் பற்றி மாநிலங்களவையில் அமித்ஷா பேசியவை சங் பரிவார் கூட்டத்தின் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அம்பேத்கர் அவர்களை இகழ்வதால் அவருடைய புகழ் மறைய போவதில்லை. அமித்ஷா மட்டுமல்ல, யார் வந்தாலும் அவரது புகழை அழிக்கவோ தவிர்க்கவோ இயலாது. இன்றும் என்றும் என்றென்றும் தேவையாக இருக்கிறது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்தியல்.

அமித்ஷா சார்ந்திருக்கும் சங் பரிவார கூட்டத்திற்கு பாபாசாகேப் இயற்றிய இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. அம்பேத்கர் அவர்களின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதின் வெளிப்பாடு தான் அமைச்சரின் இந்த ஆணவப் பேச்சு. அம்பேத்கர் குறித்து தனது வக்கிர கருத்துக்களை கூறிய அமித்ஷா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.என தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்