ரோகித், கே.எல். ராகுலை தொடர்ந்து 3-வது இந்திய வீரருக்கு காயம்.. வெளியான தகவல்
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பாரடர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்திய அணியினர் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பயிற்சியின்போது இந்திய வீரர்களான கே.எல். ராகுலுக்கு கையிலும், கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காலிலும் காயம் ஏற்பட்டதாக தெரிய வந்தது.
அந்த வரிசையில் தற்போது வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்டிங் பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் பயிற்சி தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயத்தன்மை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆகாஷ் தீப் கடந்த போட்டியில் இறுதி கட்டத்தில் பும்ராவுடன் இணைந்து பேட்டிங்கில் 31 ரன்கள் அடித்து இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க முக்கிய பங்கு வகித்தார்.