< Back
கிரிக்கெட்
இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்த அடில் ரஷீத்

image courtesy: AFP

கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்த அடில் ரஷீத்

தினத்தந்தி
|
21 Sept 2024 7:43 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அடில் ரஷீத் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

லீட்ஸ்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 270 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 74 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளும், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத் மற்றும் ஜேக்கம் பெத்தேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதில் அடில் ரஷீத் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 200 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

மேலும் செய்திகள்