அடிலெய்டு டெஸ்ட்: இந்தியாவின் ஆடும் அணியை தேர்வு செய்த கவாஸ்கர்... யாருக்கெல்லாம் இடம்..?
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
மும்பை,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கனக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்காக தான் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் அணியை சுனில் கவாஸ்கர் அறிவித்துள்ளார். முதல் போட்டியில் விளையாடிய துருவ் ஜுரெல். படிக்கல்லுக்கு பதிலாக அணிக்கு திரும்பியுள்ள கேப்டன் ரோகித் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை சேர்த்துள்ளார். அதேவேளையில் முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தரை நீக்கியுள்ள அவர் அவருக்கு பதிலாக முன்னணி வீரர் ஜடேஜாவை சேர்த்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, பும்ரா மற்றும் சிராஜ்.