< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
எமர்ஜிங் ஆசிய கோப்பை; இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்
|25 Oct 2024 11:31 PM IST
எமர்ஜிங் ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
அல் அமேரத்,
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடீல் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்தியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் எமர்ஜிங் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.