< Back
கிரிக்கெட்
கே.எல். ராகுல், தீபக் ஹூடாவை முந்தி சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா

image courtesy: twitter/@BCCI

கிரிக்கெட்

கே.எல். ராகுல், தீபக் ஹூடாவை முந்தி சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா

தினத்தந்தி
|
7 July 2024 7:56 PM IST

இந்திய அணிக்காக அறிமுகம் ஆன 2-வது இன்னிங்சிலேயே அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஹராரே,

இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலி ல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி, மசகட்சா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

முன்னதாக கடந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகம் ஆன அபிஷேக் சர்மா, தனது முதலாவது ஆட்டத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் 2-வது போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக குறைந்த இன்னிங்சில் சதம் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் கே.எல். ராகுல், தீபக் ஹூடாவை பின்னுக்கு தள்ளி அபிஷேக் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னர் தீபக் ஹூடா தன்னுடைய மூன்றாவது போட்டியிலும், ராகுல் தன்னுடைய நான்காவது போட்டியிலும் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்