2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா... யாருக்கெல்லாம் இடம்..?
|ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அணிக்கு ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸை கேப்டனாக நியமித்துள்ளார்.
புதுடெல்லி,
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், வர்ணனையாளர்களும், நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணிகளை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம்.
அந்த வரிசையில் தற்போது இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா 2024ம், ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸை அவர் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய 3 இந்தியர்களுக்கு அவர் இடம் அளித்துள்ளார்.
இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலாந்தின் பென் டக்கட்டை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மிடில் ஆர்டரில் இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஹாரி புரூக், இலங்கையின் காமிந்து மெண்டிஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து விக்கெட் கீப்பராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை தேர்வு செய்துள்ளார்.
தொடர்ந்து ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடாவை தேர்வு செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), பென் டக்கட் (இங்கிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஹாரி புரூக் (இங்கிலாந்து), காமிந்து மெண்டிஸ் (இலங்கை), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ஜஸ்ப்ரீத் பும்ரா (இந்தியா), ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா).