< Back
கிரிக்கெட்

கிரிக்கெட்
5-வது டி20: நியூசிலாந்து - பாகிஸ்தான் இன்று மோதல்

26 March 2025 3:15 AM IST
நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
வெலிங்டன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்த 4 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி வெலிங்டனில் இன்று காலை 11.45 மணியளவில் நடைபெற உள்ளது.