5வது டி20 போட்டி; இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழை காரணமாக ரத்து
|இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5வது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
செயிண்ட் லூசியா,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இதில் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்தும், 4வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் களம் இறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது.
மழை நின்ற பின் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால். மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்டுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றி அசத்தியது.