< Back
கிரிக்கெட்
இன்னும் 5 விக்கெட்டுகள்; வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் வரலாறு படைக்கும் முனைப்பில் பாண்ட்யா

கோப்புப்படம்

கிரிக்கெட்

இன்னும் 5 விக்கெட்டுகள்; வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் வரலாறு படைக்கும் முனைப்பில் பாண்ட்யா

தினத்தந்தி
|
4 Oct 2024 1:03 PM IST

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 2 மாபெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.

அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் (96 விக்கெட்) முதலிடத்திலும், புவனேஷ்வர் குமார் (90 விக்கெட்) 2ம் இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா (89 விக்கெட்) 3வது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா (86 விக்கெட்) 4வது இடத்திலும் உள்ளனர்.

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் பாண்ட்யா இன்னும் 5 விக்கெட் எடுத்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளராக மாறுவார். அதுமட்டுமில்லாமல் 4 விக்கெட் கைப்பற்றினால் வங்காளதேச அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராகவும் மாறுவார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக கிரிக்கெட் கைப்பற்றியவர்கள்:

யுஸ்வேந்திர சாஹல் - 96 விக்கெட்

புவனேஷ்வர் குமார் - 90 விக்கெட்

ஜஸ்ப்ரீத் பும்ரா - 89 விக்கெட்

ஹர்திக் பாண்ட்யா - 86 விக்கெட்

அர்ஷ்தீப் சிங் - 83 விக்கெட்

இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்;

யுஸ்வேந்திர சாஹல் - இந்தியா - 9 விக்கெட்

தீபக் சாஹர் - இந்தியா - 8 விக்கெட்

அல்-அமின் ஹொசைன்- வங்காளதேசம் - 8 விக்கெட்

ரூபெல் ஹொசைன் - வங்காளதேசம் - 7 விக்கெட்

வாஷிங்டன் சுந்தர் - இந்தியா - 7 விக்கெட்

ஷகிப் அல் ஹசன் - வங்காளதேசம் - 7 விக்கெட்

ரவிச்சந்திரன் அஸ்வின் - இந்தியா - 6 விக்கெட்

ஹர்திக் பாண்ட்யா - இந்தியா - 6 விக்கெட்

மேலும் செய்திகள்