< Back
கிரிக்கெட்
5 அடி உயர மணல் சிற்பம்: விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்

Image Courtesy: X (Twitter) / @sudarsansand

கிரிக்கெட்

5 அடி உயர மணல் சிற்பம்: விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்

தினத்தந்தி
|
5 Nov 2024 6:29 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார். இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 5 அடி உயரமுள்ள விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக 4 டன் மணலை பயன்படுத்தி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரைசதங்களுடன் 9,040 ரன்கள் குவித்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 13,906 ரன்கள் குவித்துள்ளார்.மேலும், 125 டி20 போட்டியில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்