< Back
கிரிக்கெட்
4-வது டி20 போட்டி: இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

image courtesy: twitter/@ICC

கிரிக்கெட்

4-வது டி20 போட்டி: இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

தினத்தந்தி
|
13 July 2024 12:40 PM GMT

இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 4-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான மதவேரா - மருமணி இணை சிறப்பான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. மதவேரா 25 ரன்களிலும், மருமணி 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனைதொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் சிக்கந்தர் ராசா மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராசா 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 46 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா மற்றும் ஷிவம் துபே தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்