4வது டி20 போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
|இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
செயிண்ட் லூசியா,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் பெத்தேல் 62 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 221 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் எவின் லீவிஸ் 68 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ரெஹான் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.