< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
3-வது டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..? இன்று மோதல்
|13 Nov 2024 5:15 AM IST
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையிலான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
செஞ்சூரியன்,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையலான 3-வது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.
முந்தைய போட்டியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தயாராகி உள்ளது. அதே வேளையில் சொந்த மண்ணில் டி20 தொடரை வெல்ல வேண்டும் என்ற ஆவலில் தென் ஆப்பிரிக்க அணியினர் உள்ளனர். இதனால் இந்த ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.