< Back
கிரிக்கெட்
3-வது டி20 போட்டி: தொடரை சமன் செய்யுமா இந்தியா? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
கிரிக்கெட்

3-வது டி20 போட்டி: தொடரை சமன் செய்யுமா இந்தியா? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
9 July 2024 8:40 AM GMT

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

சென்னை,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். ஆனால் இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்