< Back
கிரிக்கெட்
3வது டி20 போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு

கோப்புப்படம்

கிரிக்கெட்

3வது டி20 போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு

தினத்தந்தி
|
13 Nov 2024 8:09 PM IST

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

செஞ்சூரியன்,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையலான 3-வது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. முந்தைய போட்டியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தயாராகி உள்ளது.

அதே வேளையில் வெற்றிப்பயணத்தை தொடர தென் ஆப்பிரிக்கா கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்