< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20; புது கேப்டன் தலைமையில் களம் இறங்கும் பாகிஸ்தான்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20; புது கேப்டன் தலைமையில் களம் இறங்கும் பாகிஸ்தான்

தினத்தந்தி
|
18 Nov 2024 11:56 AM IST

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

ஹோபர்ட்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரம் காட்டும் ஆறுதல் வெற்றி பெற பாகிஸ்தான் முனைப்பு காட்டும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பாகிஸ்தான் அணி புது கேப்டனான சல்மான் அலி ஆகா தலைமையில் களம் இறங்க உள்ளது.

மேலும் இந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரிஸ்வான் இல்லாத காரணத்தினால் ஹசீபுல்லா கான் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார்.

பாகிஸ்தான் அணி விவரம்; சாஹிப்சாதா பர்ஹான், பாபர் அசாம், ஹசீபுல்லா கான் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கான், சல்மான் அலி ஆகா (கேப்டன்), முகமது இர்பான் கான், அப்பாஸ் அப்ரிடி, ஷாகின் அப்ரிடி, ஜஹந்தத் கான், ஹாரிஸ் ரவுப், சுப்யான் முகீம்.


மேலும் செய்திகள்