< Back
கிரிக்கெட்
3வது ஒருநாள் போட்டி; இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்
கிரிக்கெட்

3வது ஒருநாள் போட்டி; இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

தினத்தந்தி
|
7 Nov 2024 7:42 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

பார்படாஸ்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.

இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்,

இதில் பில் சால்ட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ஜேக்ஸ் 5 ரன், ஜோர்டன் காக்ஸ் 1 ரன், லிவிங்ஸ்டன் 6 ரன், சாம் கர்ரன் 40 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து மவுஸ்லி, பில் சால்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் இருவரும் அரைசதம் அடித்தனர்.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சால்ட் 74 ரன்னிலும், மவுஸ்லி 57 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஓவர்டென் மற்றும் ஆர்ச்சர் களம் இறங்கினர். இறுதியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ போர்டு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 264 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது .

தொடக்கத்தில் லீவிஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . தொடர்ந்து பிரணடன் கிங், கீசி கார்டி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் , இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி பிரணடன் கிங் , கீசி கார்டி இருவரும் சதமடித்து அசத்தினர் . பின்னர் பிரண்டன் கிங் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மறுபுறம் கீசி கார்டி நிலைத்து ஆடினார் .இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஒருநாள் தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

மேலும் செய்திகள்