< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
|6 Nov 2024 2:45 PM IST
ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி இன்று நடைபெறுகிறது
பார்படாஸ்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு ஒரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது . தொடரை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.