< Back
கிரிக்கெட்
3-வது ஒருநாள் போட்டி: வங்காளதேச அணி 321 ரன்கள் குவிப்பு
கிரிக்கெட்

3-வது ஒருநாள் போட்டி: வங்காளதேச அணி 321 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
12 Dec 2024 11:02 PM IST

தொடர்ந்து 322 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது.

செயின்ட் கிட்ஸ்,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் , இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது . இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு வங்காளதேச அணி 321 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணியில் மஹ்மதுல்லா 84 ரன்களும் , மெஹிதி ஹசன் 77 ரன்களும் , சவுமியா சர்கார் 73 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 322 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது.

மேலும் செய்திகள்