பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி; தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் விலகல்
|தென் ஆப்பிரிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஒட்னீல் பார்ட்மேன் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்ல்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஒட்னீல் பார்ட்மேன் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவர் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்னீல் பார்ட்மேனுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும், டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.