< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
2-வது டெஸ்ட்: தொடரை சமன் செய்யுமா பாகிஸ்தான்..? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
|3 Jan 2025 6:19 AM IST
பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கேப்டவுன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள்: கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபுறம் சொந்த மண்ணில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் நினைக்கின்றனர். இதனால் இந்த போட்டி எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.