< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 316 ரன்கள் குவிப்பு
கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 316 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
4 Jan 2025 6:23 AM IST

தென் ஆப்பிரிக்கா தரப்பில் 2 வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

கேப்டவுன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள்: கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொப்டங்கிய தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்களுக்குள் 3 முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஜோடி சேர்ந்த பவுமா - ரையான் ரிக்கெல்டன் இணை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

அபாரமாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். அபாரமாக ஆடிய ரிக்கெல்டன் 2-வது சதத்தையும், பவுமா 4-வது சதத்தையும் நிறைவு செய்தனர். அணியின் ஸ்கோர் 307-ஆக உயர்ந்தபோது, பவுமா 106 ரன்களில் கேட்ச் ஆனார். இவர்கள் இருவரும் இணைந்து 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து அசத்தினர்.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 80 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்துள்ளது. ரிக்கெல்டன் 176 ரன்களுடனும் , டேவிட் பெடிங்ஹாம் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் ஆகா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்