< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியிலிருந்து முன்னணி வீரர் நீக்கம்
|30 Aug 2024 9:15 AM IST
பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
ராவல்பிண்டி,
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியும் அதே ராவல்பிண்டியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மிர் ஹம்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.