< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இலங்கை அணி 306 ரன்கள் குவிப்பு
கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இலங்கை அணி 306 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
26 Sept 2024 7:56 PM IST

நிலைத்து ஆடி ரன்கள் குவித்த தினேஷ் சண்டிமால் சதமடித்து அசத்தினார்.

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட்போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது .இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா, திமுத் கருணரத்னே ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் நிசாங்கா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் தொடர்ந்து நிலைத்து ஆடிய திமுத் கருணரத்னே 46 ரன்களில் வெளியேறினார். பின்னர் தினேஷ் சண்டிமால் , மேத்யூஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . நிலைத்து ஆடி ரன்கள் குவித்த தினேஷ் சண்டிமால் சதமடித்து அசத்தினார். மேத்யூஸ் அரைசதமடித்தார்.

தினேஷ் சண்டிமால் 116 ரன்களுக்கு வெளியேறினார் தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார் இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது மேத்யூஸ் 78 ரன்களும் மெண்டிஸ் 51 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்