< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஜிம்பாப்வே அணி பந்துவீச்சு தேர்வு
|2 Jan 2025 5:43 PM IST
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்
புலவாயோ,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி புலவாயோவில் நடைபெற்ற இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.