< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
2வது டி20: ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
|13 Dec 2024 2:45 AM IST
முதல் டி20 போட்டி ஹராரேவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஹராரே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என அணி ஜிம்பாப்வே அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது . இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஜிம்பாப்வே அணி முனைப்பு காட்டும். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தான் அணி போராடும்