< Back
கிரிக்கெட்
2வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி
கிரிக்கெட்

2வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி

தினத்தந்தி
|
16 Oct 2024 7:04 AM IST

வெஸ்ட் இண்டீஸ் 16.1 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .

தம்புல்லா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குசல் மெண்டிஸ் 26 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய குசல் பெரேரா 24 ரன்னிலும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பதும் நிசாங்கா அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்னிலும் அவுட் ஆகினர்.தொடர்ந்து காமிந்து மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் அசலங்கா 9 ரன்னிலும், காமிந்து மெண்டிஸ் 19 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 54 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது .

தொடக்கம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 16.1 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.

மேலும் செய்திகள்