2-வது டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
|20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.
கெபேஹா,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவட்டாகினர். நிதானமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய உள்ளது.