< Back
கிரிக்கெட்
2-வது டி20: தோல்விக்கான காரணம் என்ன..? - இந்திய அணியின் கேப்டன் விளக்கம்
கிரிக்கெட்

2-வது டி20: தோல்விக்கான காரணம் என்ன..? - இந்திய அணியின் கேப்டன் விளக்கம்

தினத்தந்தி
|
12 Nov 2024 2:41 AM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

கெபேஹா,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 47 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : எப்பொழுதுமே ஒரு இலக்கு எவ்வளவு ரன்களாக இருந்தாலும் நாம் அதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனாலும் டி20 போட்டிகளை பொறுத்தவரை 125 முதல் 140 வரை குறைவான ரன்களை எடுக்கக் கூடாது. ஆனாலும் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த இலக்கை வைத்தே போராடியது பெருமை அளிக்கிறது.

குறிப்பாக வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்தது நம்ப முடியாத அளவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த இடத்திற்கு வருவதற்காக அவர் பல ஆண்டுகளாக போராடி இருக்கிறார். நாங்கள் அனைவருமே அவருடைய இந்த சிறப்பான பந்துவீச்சை மகிழ்ச்சியாக கொண்டாடினோம். இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருக்கின்றன. நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்