2வது டி20; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
|சிறப்பாக விளையாடிய ரீசா ஹென்ரிக்ஸ் சதமடித்து அசத்தினார்
சென்சூரியன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி சென்சூரியனில் நேற்று நடைபெற்றது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிகை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது . இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 206 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி சைம் ஆயுப் 98 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 207 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது .
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். இதனால் 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரீசா ஹென்ரிக்ஸ் சதமடித்து அசத்தினார். ரஸ்ஸி வான் டசென் அரைசதமடித்தார் .இந்த வெற்றியால் 2-0என தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியுள்ளது .