2வது ஒருநாள் போட்டி: இலங்கை - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
|முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது
பல்லேகலே,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியது . முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது . இந்த வெற்றியால் ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது .
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இலங்கை முயற்சிக்கும், அதே வேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது .