< Back
கிரிக்கெட்
முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
கிரிக்கெட்

முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
2 Aug 2024 2:07 PM IST

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல்,குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.

இலங்கை: பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, சரித் அசலன்கா (கேப்டன்), ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, அகில தனஞ்சயா, அசிதா பெர்னாண்டோ, முகமது ஷிராஸ்

மேலும் செய்திகள்