< Back
கிரிக்கெட்
டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள்; கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை
கிரிக்கெட்

டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள்; கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை

தினத்தந்தி
|
14 Nov 2024 7:29 PM IST

ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் (12,411 ரன்கள்) மற்றும் ஆரன் பின்ச் (11,458 ரன்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

பிரிஸ்பேன்,

பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதன்படி, இன்று முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்தது.

இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் 10 ஆயிரம் ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன்படி, இந்த சாதனையை படைத்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தத்தில் 16-வது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து இந்த சாதனையை அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.

மேக்ஸ்வெல் இதுவரை 448 போட்டிகளில் பங்கேற்று, 421 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கிறார். மொத்தம் 10,031 ரன்களை எடுத்து பேட்டிங் சராசரி 27.70 வைத்திருக்கிறார். இவற்றில், 7 சதங்களும், 54 அரை சதங்களும் அடங்கும். ஆட்டமிழக்காமல் 154 ரன்கள் என்பதே இவருடைய அதிகபட்ச ரன் குவிப்பாக உள்ளது.

இவருக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் (12,411 ரன்கள்) மற்றும் ஆரன் பின்ச் (11,458 ரன்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

மேலும் செய்திகள்