< Back
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் 2024
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி... ஜெய் ஷா அறிவிப்பு
|21 July 2024 7:52 PM IST
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
மும்பை,
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குவதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.