< Back
சிறப்பு பக்கம்
கொடம்புளி பயிரிட்டால் வருமானம் ஈட்டலாம்
சிறப்பு பக்கம்

கொடம்புளி பயிரிட்டால் வருமானம் ஈட்டலாம்

தினத்தந்தி
|
4 May 2023 4:48 PM IST

தமிழ்நாட்டில் சமையலில் புழக்கத்தில் இருந்த கொடம்புளியின் மருத்துவ குணங்களை அறிந்து, தற்போது கொடம்புளிக்கு அதிக வரவேற்பு உள்ளது. விவசாயிகள் கொடம்புளியை பயிரிட்டால் நல்ல லாபம் பெற முடியும்.

தற்காலத்தில் பெரும்பாலும் சமையலில் சேர்க்கப்படும் புளியை சீமைப்புளி என்கிறார்கள். இதைவிட கொடம்புளி என்ற நாட்டு புளி உடலுக்கு நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குவதாக சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. காலப்போக்கில் கொடம்புளியின் பயன்பாடு குறைந்து விட்டது.

கொடம்புளியின் மருத்துவ குணங்கள் என்ற வகையில் அது உணவுக்கு நல்ல சுவை, மணம் தருகிறது. உடல் பருமனைகுறைக்கவும், வாயுத் தொல்லை, செரிமான கோளாறு போக்கவும் தயாரிக்கப்படும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக குடல்புண்ணுக்கு கொடம்புளி நல்ல மருந்தாக விளங்குவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

கொடம்புளி பழத்தில் சான்தோன், பென்சோபினோன்ஸ், ஹைட்ராக்சிக் சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், போன்ற உடலுக்கு தேவையான அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தில் அதிக அளவு விட்டமின் 'சி' சத்து உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பொதுவாக, கொடம்புளி சிறிய மலைப்பாங்கான பகுதிகளில் நன்கு வளரும் இயல்புடையது. இதுகுறித்து தமிழ்நாடு தோட்டக்கலை துறையில் கேட்டு அறிந்து விவசாயிகள் பயிரிடலாம்.

மேலும் செய்திகள்