< Back
சிறப்பு செய்திகள்
சிறப்பு செய்திகள்

அமெரிக்காவில் 185 ஏக்கரில் மிகப்பெரிய இந்து கோவில்

தினத்தந்தி
|
10 Oct 2023 10:05 PM IST

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. 185 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் உலகின் 2-வது மிகப்பெரிய இந்து கோவிலாகும்.

2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கோவிலின் கட்டுமான பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 10 ஆயிரம் சாமி சிலைகள், 1 பெரிய கோவில் மற்றும் 12 துணைக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1,000 ஆண்டுகள் தாங்கும் வகையில் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) இது பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

12-ம் நூற்றாண்டை சேர்ந்த கம்போடியாவின் அங்கோர்வாட் கோவில் உலகின் மிகப்பெரிய கோவில் ஆகும். சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்