குழந்தைகளுக்கு 'மசாஜ்' செய்வது நல்லது..!
|பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தை களின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கும். உடல் எடை, வளர்ச்சிக்கும் வழிவகை செய்யும்.
♥ முதலில் குழந்தையின் தலையில் கைகளை வைத்து சிறிது எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்ய தொடங்க வேண்டும். கைவிரல்களின் அழுத்தம் மென்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் எலும்பு பகுதிகளும், இணைப்பு பகுதிகளும் வலிமையாக இருக்காது.
♥ மூக்கு, காது மடல்களை மென்மையாக வருடிவிட வேண்டும்.
♥ பின்னர் இரு கைகளையும் மார்பு பகுதியில் வணங்குவது போல் குவித்து வைத்து மெதுவாக நீவி விட வேண்டும்.
♥ வயிற்று பகுதியில் மசாஜ் செய்யும்போது அடி வயிற்றில் கையை வைத்து கடிகார முட்கள் சுழலுவது போல் மெதுவாக அழுத்திவிட வேண்டும்.
♥ மேலும் குழந்தையின் முட்டியையும், பாதங்களையும் பிடித்தபடி வயிற்றை நோக்கி மெதுவாக அமுக்க வேண்டும்.
♥ பின்னர் தொடை பகுதியில் இருந்து உள்ளங்கால் வரை நீவி விட வேண்டும்.
♥ அதேபோல் தோள்பட்டையில் இருந்து உள்ளங்கை வரைக்கும் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
♥ குழந்தையின் மணிக்கட்டை அனைத்து திசைகளிலும் மெதுவாக திருப்பி மசாஜ் செய்து விட வேண்டும்.
♥ அதன்பிறகு குழந்தையின் உள்ளங்கால்களில் பெருவிரலை கொண்டு நீவ வேண்டும்.
♥ குழந்தையின் கால்களின் பத்து விரல்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை கொண்டு மெதுவாக சொடுக்கு எடுத்து விட வேண்டும்.
♥ இறுதியில் குப்புற படுக்கவைத்து விரல் நுனிகளால் குழந்தையின் முதுகெலும்புகளை மேலிருந்து கீழாக மெதுவாக நீவி விட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் மேம்படும். செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினையும் வராது.