< Back
சிறப்பு செய்திகள்
காலை எழுந்ததும் உணவு எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்யலாமா?  உடலுக்கு நல்லதா?
சிறப்பு செய்திகள்

காலை எழுந்ததும் உணவு எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்யலாமா? உடலுக்கு நல்லதா?

தினத்தந்தி
|
6 Jan 2024 3:05 PM IST

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது குறித்து பார்ப்போம்

காலையில் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை இளைஞர்கள் பலர் பின்பற்றுகிறார்கள். 'முந்தைய நாள் இரவு உணவை உட்கொண்ட பிறகு மறுநாள் காலை வரை எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்து வந்தால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையும் குறையும்' என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அதேவேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லதா? என்ற கேள்வி எழாமல் இல்லை. இதற்கான பதில் உடலுக்கு நன்மை சேர்ப்பதாகவே இருக்கும் என்கிறார்கள், உடற்பயிற்சியாளர்கள்.

ஆனால் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து பழகியவர்களுக்கும், உடற்பயிற்சி செய்வதில் நீண்ட அனுபவம் கொண்டவர்களுக்கும் மட்டுமே வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உகந்ததாக இருக்கும்.

மற்றவர்கள் குறிப்பாக புதியவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தலைச்சுற்றல், குமட்டல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படக்கூடும். அதேவேளையில் அனைத்து தரப்பினரும் வெறும் வயிற்றில் மேற்கொள்வதற்கு ஏதுவான பயிற்சிகள் சில உள்ளன. நடைப்பயிற்சி, ஜாக்கிங், யோகா மற்றும் எளிமையான ஏரோபிக் பயிற்சிகள் அவற்றுள் முக்கியமானவை. இத்தகைய பயிற்சிகளை வெறும் வயிற்றில் செய்து வரலாம்.

மேலும் செய்திகள்