சிவப்பான பீட்ரூட்டின் சுவையான தகவல்கள்..!
|பீ ட்ரூட் என்பது பூமிக்கடியில் விளையும் ஒரு காய்கறி வகை. அதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீட்ரூட்டை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
அதை காய்கறி பொரியல், சாலடுகள் மற்றும் பழச்சாறுகள் போன்ற வடிவில் உட்கொள்ளலாம். பலருக்கு இதன் ருசி பிடிக்காது. ஆனால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு தெரிந்தவர்கள் கண்டிப்பாக தினசரி உணவில் இதை சேர்த்துக்கொள்வார்கள்.
சரி, பீட்ரூட்டின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்வோமா...?
* பீட்ரூட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதனால் பல நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து நாம் காப்பாற்றப்படுகிறோம். குறிப்பாக அதன் ஜூஸ் மற்றும் சாலட் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
* அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சினைகளை சந்திப்பவர்கள் பீட்ரூட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
* இது இயற்கையான சர்க்கரையின் வளமான மூலமாகும், இது நம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது.
* உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், கண்டிப்பாக பீட்ரூட் சாலட் அல்லது ஜூஸ் சாப்பிட வேண்டும். இதைச் செய்தால், சில நாட்களில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
* சோர்வு அல்லது பலவீனம் பற்றி அடிக்கடி புகார் செய்பவர்களுக்கு, பீட்ரூட் சிறந்த மருந்து.
* பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்த சுத்திகரிப்பு ஏற்படுகிறது, இது உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது.
* பீட்ரூட் நம் அழகுக்கும் மிகவும் முக்கியமானது. இது முடி உதிர்வைக் குறைத்து, முகத்திற்கு அற்புதமான பொலிவைத் தருகிறது.
சத்துக்கள்
பீட்ரூட்டில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உட்பட பல சத்துக்கள் உள்ளன. 10 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், 43 மில்லிகிராம் கலோரிகள் மற்றும் 2 கிராம் கொழுப்பு மட்டுமே கிடைக்கும். அதாவது உடல் எடையை இது அதிகரிக்காது. அதேபோல் இதில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. இது நமது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும்.