< Back
தேசிய செய்திகள்
உத்தர கன்னட மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி..?
தேசிய செய்திகள்

உத்தர கன்னட மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி..?

தினத்தந்தி
|
16 July 2024 3:55 PM IST

கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள ஷிரூரில் இன்று ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உட்பட 7 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய நெடுஞ்சாலை 66-ல் சாலையோரம் பெட்டிக்கடை நடத்தி வந்த குடும்ப உறுப்பினர்கள், மலையிலிருந்து சரிந்து விழுந்த மண்ணில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் நிலச்சரிவினால் எரிவாயு டேங்கர் ஒன்று, அருகில் உள்ள கங்காவலி ஆற்றுக்குள் தள்ளப்பட்டது, முதற்கட்ட தகவலின் அடிப்படையில், சம்பவத்தின் போது கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் கிளீனரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பிய கார்வார் எம்.எல்.ஏ. சதீஷ் சைல், நிலச்சரிவைத் தொடர்ந்து கங்காவலி ஆற்றில் 10 முதல் 15 பேர் விழுந்திருக்கலாம் என்று தனக்கு கிடைத்த அறிக்கையின்படி கூறினார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும், அதுகுறித்து அறிக்கை வெளியிட உள்ளதாகவும் வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்