< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்: வாரணாசியில் சரிந்து மீண்ட மோடி
|4 Jun 2024 9:21 AM IST
உத்தர பிரதேச மநிலத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார்.
வாரணாசி,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களமிறக்கப்பட்டார். பிரதமர் மோடி கடந்த முறையும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் வாக்கில் மோடி முன்னிலை பெற்றார். ஆனால் அடுத்த சுற்றில் பிரதமர் மோடி திடீர் பின்னடைவை சந்தித்தார். மூன்று சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து இருந்தார். தற்போதைய நிலவரப்படி 436 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை பெற்றுள்ளார்.