மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் - ராதிகா உறுதி
|விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிடுகிறார்
விருதுநகர் ,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவர் நேற்று விருதுநகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசியதாவது,
மக்கள் குறைகளைத் தீர்க்கப் பாடுபடுவேன். அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் இங்கு வரவில்லை. அது நமக்குத் தேவையில்லை.ஏற்கெனவே இங்கு இருந்தவர் தொகுதிக்கு வரவில்லை என்றுதான் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் எப்போதும் இங்குதான் இருப்பேன். கண்டிப்பாக நான் இங்கிருந்துதான் செயல்படுவேன். டாஸ்மாக், போதைப் பழக்கம் போன்றவற்றால் ஆண்கள் பாதிக்கப்படுவதால் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். இவை ஒழிக்கப்பட வேண்டும். மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். அதனால் உங்கள் வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் இல்லாத ஆட்சி செய்த ஒரே கட்சி பா.ஜ.க.தான். என தெரிவித்தார்.