< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
'ஜனநாயகம் நீடிக்குமா? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் விடையாக அமையும்' - வைகோ
|19 April 2024 7:35 PM IST
இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறை நீடிக்குமா? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் விடையாக அமையும் என வைகோ தெரிவித்தார்.
தென்காசி,
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, "இந்தியாவில் தற்போது உள்ள நாடாளுமன்ற ஜனநாயக முறை நீடிக்குமா? அல்லது ஜனாதிபதி ஆட்சி உருவாகுமா? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் விடையாக அமையும்" என்று தெரிவித்தார்.