< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம் - பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
நாடாளுமன்ற தேர்தல்-2024

'தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்' - பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தினத்தந்தி
|
10 April 2024 5:48 PM IST

அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;-

"பொள்ளாச்சியில் இன்று நடைபெறுவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் அல்ல, வெற்றி விழா கூட்டம் போல் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டன.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அகிய இரு தலைவர்களும் தமிழக மக்களுக்காக இறைவன் கொடுத்த கொடை ஆவர். அவர்கள் இருவரும் மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். அவர்கள் அ.தி.மு.க.வை கட்டிக் காத்து நம்மிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். நாம் தேர்தல் என்ற இந்த போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்.

தமிழகத்தை 30 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டு வருவதற்கு அ.தி.மு.க. அரசு பாடுபட்டது. இதனால் தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் அகில இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது." இவ்வாறு அவர் பேசினார்.



மேலும் செய்திகள்