கேரளாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்
|கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
கண்ணூர்,
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
கேரளாவில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். மேலும், திருச்சூரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கைச் செலுத்தினார்.
மேற்கு வங்காள கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.