< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
2-ம் கட்ட தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஏமாற்றம் - பிரதமர் மோடி
|26 April 2024 9:28 PM IST
இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுவான ஆதரவை தருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல், கடந்த 19ம் தேதியன்று 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்தநிலையில், 2-வது கட்டமாக 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளில் நடந்த வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று நடந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பாக பிரதமர் மோடி தனது ‛எக்ஸ் ' வலைதளத்தில் கூறியுள்ளதாவது:-
இந்தியா முழுவதும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த இணையற்ற ஆதரவால் எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப்போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்களர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுவான ஆதரவை தருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.