< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க: இந்தூரில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க: இந்தூரில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம்

தினத்தந்தி
|
11 May 2024 6:00 AM GMT

இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்ட அக்சய் காந்தி பாம் தனது வேட்புமனுவை கடைசி நாளில் வாபஸ் பெற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் முதல் மூன்று கட்ட தேர்தல்களில் 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், உஜ்ஜைன், இந்தூர் ஆகிய 8 தொகுதிகளுக்கு 4-வது கட்டமாக மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தூர் தொகுதியில் தற்போதைய பா.ஜ.க. எம்.பி. சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்சய் காந்தி பாம் என்பவர் களமிறக்கப்பட்டார். ஆனால் காங்கிரசுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் கடைசி நாளில் அவர் தனது வேட்புமனுவை கடைசி நாளில் வாபஸ் பெற்று கொண்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.

இதனால், 9 சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பலம்வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லாததால் அங்கு பா.ஜ.க.வின் வெற்றி உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது அங்கு பிரசாரம் செய்து வருகிறது. தங்களுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் நோட்டாவுக்கு வாக்காளிக்குமாறு காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மக்களவை தோ்தலில் இந்தூர் தொகுதியில் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் நோட்டாவுக்கு 5045 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் பிரசாரம் செய்து வரும் நிலையில், இத்தேர்தலில் நோட்டா புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்