< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரப்பிரதேசம்: பிரிஜ் பூஷன் சிங்கின் மகன் முன்னிலை
|4 Jun 2024 10:28 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியில் முன்னாள் எம்.பி.யும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிக்கியவருமான பிரிஜ் பூஷன் சிங்கின் மகன் கரன் பூஷன் சிங் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார்.
பாலியல் புகாரில் சிக்கிய தந்தைக்கு பதிலாக களமிறக்கப்பட்ட அவர், தற்போதைய நிலவரப்படி மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.