< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பா.ஜனதா ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் தற்கொலை - அகிலேஷ் யாதவ்

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

பா.ஜனதா ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் தற்கொலை - அகிலேஷ் யாதவ்

தினத்தந்தி
|
19 April 2024 4:15 AM IST

வேலையில்லா திண்டாட்டத்தால் பா.ஜனதா ஆட்சியில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

கன்னாஜ்,

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கன்னாஜ் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அவர் பேசும்போது, "தற்போது வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின்படி 90 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை. இளைஞர்கள் வேலையில்லா விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்த முறை காஜியாபாத் முதல் காஜிபூர் வரை பா.ஜனதா அழிந்துவிடும். சமாஜ்வாடி கட்சி விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும், மேலும் கன்னாஜ் தொகுதியில் சாதனை வாக்குகளுடன் வெற்றி பெறும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்